ஆஃபர் விலையில் செல்போன் தருவதாக கூறி ஹேர் ட்ரையரை அனுப்பிய கும்பல்..!
ஆஃபர் விலையில் செல்போன் தருவதாக கூறி சாலையோர உணவகம் உரிமையாளருக்கு ஹேர் ட்ரையரை அனுப்பிவைத்த மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்.
இவர் அதே பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வருகிறார். இவரது மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்ட வித்யா என்ற பெண் ஒருவர் இவரது மொபைல் நம்பருக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் பரிசு விழுந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
2500 செலுத்தினால் போதும் அந்த மொபைலை முகவரிக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய கண்ணன் அவர்கள் கூறிய வரைபடத்தையும் அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர் வீட்டிற்கு வந்த ஒரு பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ஹேர் டிரையர் ஒன்றும் இருந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணன் ஆன்லைன் மோசடி கும்பல் மீது பல்லடம் போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




