அமெரிக்கா சென்ற டி.ராஜேந்தர் பூரண குணம் அடைந்துள்ளார்..!
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் பூரண குணம் அடைந்துள்ளார். திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து உயர் சிகிச்சைக்காக அவருக்கு அமெரிக்கா அழைத்து செல்லப்பட்ட டி ராஜேந்தர் தற்போது பூரண குணமடைந்து ஓய்வெடுத்து வருகிறார். ஒருமாதம் அமெரிக்காவிலேயே தங்கிஓய்வெடுக்க தேவையான வசதிகளை செய்து கொடுத்து விட்டு நடிகர் சிலம்பரசன் படப்பிடிப்புகளில் பங்கேற்றுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




