--- --:--:-- --

தற்காலிக ஆசிரியர் நியமனம் – தடையை நீக்க மறுப்பு

1

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

 

இந்த அறிவிப்பை ரத்து செய்வதோடு இடைக்கால தடை விதித்து உத்தரவிடக்கோரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் சீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

 

இந்நிலையில் இடைக்கால தடையை நீக்க கோரி நீதிபதி எம் எஸ் ரமேஷ் தமிழக அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால தடை காரணமாக மதுரை கிளையில் உள்ள மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதற்கு நீதிபதி எந்த அடிப்படையிலும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர் என கேள்வி எழுப்பினர். அதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அப்படி என்றால் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கலாம் என்றும், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான அவசரம் இல்லை எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon