--- --:--:-- --

ATM குப்பைத்தொட்டியில் கொத்து கொத்தாக நகை கண்டுபிடித்து கொடுத்த காவலருக்கு பாராட்டு..!

4

சென்னை குன்றத்தூர் தனியார் ஏடிஎம் மைய குப்பைத்தொட்டியில் பெண் ஒருவர் 42 சவரன் தங்க நகைகளை போட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயில் செல்லும் சாலையில் தனியார் வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.

 

இந்த வங்கியின் காவலாளியை காலை சென்றபோது குப்பைத் தொட்டியில் இருந்த தங்க நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

 

அதில் பெண் ஒருவர் ATM மையத்திற்குள் நுழைந்து குப்பைத்தொட்டியில் நகையை போட்டு விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் நகையை போட்டு சென்ற பெண் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த நகைகளை ஒப்படைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

 

Right Menu Icon