--- --:--:-- --

சிறுமியின் 16 வார கருவை கலைக்க அனுமதி..!

3

பாலியல் வன்கொடுமை காரணமாக கருவுற்ற சிறுமியின் 4 மாத கருவை கலைக்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கு ஒன்றில் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த சிறுமி அங்கு கருவுற்றிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. சிறுமி தான் பொருளாதார ரீதியில் வசதி படைத்தவள் அல்ல எனக்கூறியுள்ளார் .

 

வன்கொடுமை செய்யப்பட்டு கடுமையான மன உளைச்சலில் உள்ள சிறுமியின் 16 வார கருவை கலைக்க அனுமதி வழங்கி தீர்ப்பளித்தனர். பாலியல் வன்கொடுமையால் ஏற்பட்ட கரு என்பதால் இது தேவையற்றது என நீதிமன்றம் கருதுவதாகவும் குழந்தையைப் பெற்றெடுக்க எந்த பெண்ணையும் வற்புறுத்த முடியாது எனவும் கூறி நீதிபதிகள் குழந்தையை பெற்றெடுப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தனர்.

 

குழந்தையை பெற்றெடுத்தாள் கூட உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்தில் கொண்டு கருவை கலைக்க அனுமதி வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பொதுவாக ஒரு பெண் கருவை கலைக்க முடிவு செய்தால் 12 வார கருவை கலைத்துவிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon