--- --:--:-- --

திடீரென பைக்கில் பற்றிய தீ..! ஒருவர் உயிரிழப்பு..!

2

ர்நாடக மாநிலம் மாண்டியா அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சக்கர வாகனம் திடீரென தீப்பற்றி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மைசூரை சேர்ந்த சிவராமு , அனந்த ராமையா ஆகிய இருவர் டிவிஎஸ் ஜூபிடர் இருசக்கர வாகனத்தில் சிங்கார குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

 

அப்போது இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியது நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரின் உடலிலும் தீ பற்றியதாக கூறப்படுகிறது இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைகளில் சேர்த்தனர் .

 

இந்த நிலையில் சிவராமு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த அனந்த ராமையா சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon