--- --:--:-- --

பர்கர் சாப்பிட்ட 9 பேருக்கு திடீர் உடல் நலக்குறைவு..!

3

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் பர்கர் சாப்பிட்டவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

நாமக்கல் சேலம் சாலையில் இயங்கி வரும் உணவகத்தில் பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைப் போல பர்கர் சாப்பிட்ட 8 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்புகின்றனர்.

 

முன்னதாக 16ஆம் தேதி சவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் உணவக உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சரியாக சமைக்கப்படாத வேக வைக்கப்படாத உணவுகளை உருவாக்கும் பூஞ்ஜைகளால் தான் ஒவ்வாமை ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

Right Menu Icon