மத்திய அரசுடன் சுமூகமாக இருப்பதால் தமிழகத்திற்கு 9 மருத்துவக்கல்லூரிகள்
மத்திய அரசுடன் தமிழக அரசு சுமுகமான முறையில் இருப்பதால் தமிழகத்திற்கு 9 மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மதுரையில் ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.






