--- --:--:-- --

ஆற்றுப்பகுதியில் 700 வீடுகள் அகற்றம்.. அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்..!

3

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் ஆற்றங்கரையோரம் உள்ள ஆற்றுப்பகுதியில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அப்பொழுது வீட்டில் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

ஆக்கிரமிப்பு வீடுகளில் இருக்கும் பொருட்களையும் வருவாய்த்துறையினர் அப்புறப்படுத்துவது அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

Right Menu Icon