--- --:--:-- --

வெறிநாய் கடித்ததில் 2 சிறுமிகள் உட்பட 7 பேர் படுகாயம்..!

10

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வெறிநாய் கடித்ததில் இரண்டு சிறுமிகள் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருந்து வந்துள்ளது. எதிரில் வெறிநாய் ஒன்று இரண்டு சிறுமிகள் உட்பட ஏழு பேரை மிரட்டி விரட்டி கடித்துள்ளது.

 

படுகாயமடைந்தவர்கள் ஆர்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்காடு நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon