--- --:--:-- --

திருமணம் முடிந்து வாகனத்தில் வந்த மணமகன், மணமகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு..!

6

த்திரபிரதேசத்தில் மணமக்களை ஏற்றி வந்த வாகனம் விபத்தில் சிக்கியதில் புதுமண தம்பதி உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தில் புதிதாக திருமணம் முடித்த மணமக்கள் மற்றும் உறவினர்கள் மணமகனின் வீட்டிற்கு வாகனம் ஒன்றில் புறப்பட்டனர்.

 

தேசிய நெடுஞ்சாலை வந்து கொண்டிருந்த பொழுது இவர்கள் வந்த வாகனம் மீது எதிரே வந்த டெம்போ வாகனம் மோதிய விபத்தில் இரண்டு வாகனங்களும் அருகே இருந்த பள்ளம் ஒன்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் மணமகன் மற்றும் மணமகள் அவருடைய குடும்பத்தினர் ஐந்து பேரும் உயிரிழந்தனர்.

 

காயம் அடைந்த மற்ற இரண்டு பேர் சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பனியால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon