--- --:--:-- --

புனித் ராஜ்குமார் மரணத்திற்கு பின் 15 நாட்களில் 6,000 பேர் கண் தானம்..!

9

டிகர் புனித் ராஜ்குமாரின் மரணத்திற்குப் பின்னர் கர்நாடக மாநிலத்தில் 15 நாட்களில் சுமார் 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த மாதம் காலமானார். அவர் தனது கண்களை தானம் செய்ததால் 4 பேர் பார்வை பெற்றனர்.

 

இதை தொடர்ந்து புனித் ராஜ்குமார் ரசிகர்களும் கண் தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது கண்களை தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 78 பேர் கண் தானம் செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon