பிளாஸ்டிக் பாட்டிலுடன் ஊட்டிக்கு போனால் 6 ஆண்டுகள் தடை..!
உதகை கொடைக்கானல் போன்ற மலை வாழ் தலங்ககுக்கு பிளாஸ்டிக் பாட்டில் உடன் வரும் வாகனங்களுக்கு 6 மாதம் அல்லது ஓராண்டு வரை தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்பொழுது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் அதை தடுக்க சோதனை சாவடிகள் அமைத்து தடுத்து வருவதாகவும் கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கொடைக்கானல் மற்றும் நீலகிரியில் நிரந்தரமாக சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக்கை கொண்டு வர தடை விதிக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தலைமை வன உயிரின காப்பாளர் பதிலளிக்கவும் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





