இறந்த யானையின் தந்தங்களை விற்க முயன்ற 2 வனத்துறை ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது.!
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இறந்த யானையின் தந்தங்களை விற்க முயன்ற 2 வனத்துறை ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியார் பகுதியில் தனியார் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையத்தில் யானை தந்தங்கள் சட்டவிரோதமாக விற்பனைக்கு வந்து இருப்பதாக மத்திய வனஉயிரின குற்ற தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது.
அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது இரண்டு யானை தந்தங்கள் பிடிபட்டது. விசாரணையில் சாமியப்பன் என்ற வேட்டை தடுப்பு காவலர், தற்காலிக பணியாளர் காத்தவராயன் ஆகியோர் இறந்த யானையின் தந்தங்களை எடுத்து வந்து விற்றுத்தருமாறு கூறியது தெரியவந்தது. இவர்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.







