--- --:--:-- --

மருத்துவரிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து 52 லட்சம் மோசடி..!

11

திருச்சி மருத்துவரிடம் சிபிஐ அதிகாரி போல் பேசி 52 லட்சம் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி உறையூர் ராமலிங்கம் நகரை சேர்ந்த மருத்துவரான செல்போனுக்கு கடந்த 12ஆம் தேதி செல்போன் அழைப்பு வந்துள்ளது.

 

எதிர்மறையில் பேசிய நபர் தன்னை சிபிஐ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தங்களது வங்கி கணக்கில் பண மோசடி நடந்துள்ளது என்று கூறியுள்ளார். இது குறித்து ஆய்வு செய்த வங்கி கணக்கில் உள்ள பணத்தை மும்பையில் உள்ள அலுவலக வங்கி கணக்கெடுப்பு பரிமாற்றம் செய்யும்படி கூறியுள்ளார்.

 

அதனை நம்பி ஆனந்த் தனது வங்கி கணக்கில் இருந்து 52 லட்சத்தி பத்தாயிரம் ரூபாயை அந்த நபர் கூறிய 20 வங்கி கணக்கு இருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

அதன் பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் ஆனந்த் இது குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து பண மோசடி ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon