கொரோனாவால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழப்பார்கள்..!
ஐரோப்பிய நாடுகள் மேலும் 5 லட்சம் பேர் கொரொனாவால் உயிரிழக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் கொரொனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய ஐரோப்பிய கண்டத்தின் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஐரோப்பாவில் உள்ள 83 நாடுகளில் கொரொனா பாதிப்பு கவலையளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.
இதே நிலை தொடர்ந்தால் பிப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பிய கண்டத்தில் மேலும் 5 லட்சம் பேர் கொரொனாவால் உயிரிழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.






