டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 495 பேர் பாதிப்பு..!
இந்த மாதம் இறுதிக்குள் 100 சதவீத தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நான்கு நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 495 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை புதிய வகை ஏஒய் 4.2 கொரொனா வைரஸ் கண்டறியப்படவில்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.






