ரஷ்யாவில் நதியில் மூழ்கி உயிரிழந்த 4 தமிழக மாணவர்கள்..!
ரஷ்யாவின் மருத்துவம் படித்து வந்த தமிழக மாணவர்கள் நான்கு பேர் அங்கு நதியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் ஒல்கோகத் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தின் படித்து வரும் போது தமிழக மாணவர்கள் ஓல்கோகத் நதிக்கரைக்கு விளையாடச் சென்றனர்.
அப்போது மாணவர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவரைக் காப்பாற்ற சக மாணவர்கள் 3 பேர் நீரில் குதித்துள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக 4 பேரும் நதியில் மூழ்கி உயிரிழந்தனர்.
விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த ஸ்டீபன் ,திருப்பூரைச் சேர்ந்த முகமது ஆசிப், கடலூரைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சேலத்தை சேர்ந்த மனோஜ் ஆனது என்பது தெரியவந்தது.







