ஓ.என்.ஜி.சி ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் மரணம்..!
அரபிக்கடலில் ஓஎன்ஜிசி பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது விபத்தானது. இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் அரபிக்கடலில் பல எண்ணெய் உற்பத்தி நிலையங்களை வைத்துள்ளது.
அவை கடலுக்கு அடியில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்படுகிறது. இதற்காக அவர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று இறங்க வேண்டிய இடத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.






