உதயநிதிக்கு 3ஆவது இடம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அமைச்சரவையில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு மூன்றாவது இடம் வழங்கப்படுவதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதலிடத்தில் மு.க.ஸ்டாலின், 2ஆவது இடத்தில் துரைமுருகன், 3ஆவது இடத்தில் உதயநிதி மற்றும் 19ஆவது இடத்தில் புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்ற ஆர்.ராஜேந்திரன், 21ஆவது இடத்தில் செந்தில் பாலாஜி, 27ஆவது இடத்தில் கோவி. செழியன், 29ஆவது இடத்தில் நாசர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.





