காணாமல் போன பூனையை கண்டுபிடித்துக் கொடுத்தால் 30 ஆயிரம் ரூபாய் பரிசு..!
காணாமல் போன பூனையை கண்டுபிடித்துக் கொடுத்தால் முப்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பெண் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த செரீனா என்னும் பெண் பூனையை வளர்த்து வந்தார்.
இந்த பூனைக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்வதற்காக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கடந்த ஜூன் 17ஆம் தேதி பூனையை எடுத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் பூனையை மீண்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து பூனைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூனையை மீண்டும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி பூனை காணாமல் போய்விட்டதாக செரீனாவுக்கு கால்நடை மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கால்நடை மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே பூனையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பத்திரிகையாளர்களை அழைத்து அவர் தன்னுடைய பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.







