கூந்தலுக்குள் தங்கம் வைத்து கடத்திய 3 பெண்கள் கைது..!
சென்னை விமான நிலையத்தில் கூந்தலுக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்திய 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் ஒன்று சென்னைக்கு வந்தது. பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் கண்காணித்தனர்.
சந்தேகப்படும்படி வந்த 3 பெண்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை சோதனையிட்டனர்.
அந்தப் பெண்கள் தலையில் கூந்தலுக்குள் தங்கம் பேஸ்ட் போல மாற்றப்பட்ட பாக்கெட்டுகளில் இருந்தன. 525 கிராம் தங்கத்தை அந்த பெண்கள் கொண்டு வந்துள்ளனர். இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.





