தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு..!
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற தந்தை, மகன் உட்பட 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பிரேம்குமார் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்துவிட்டு பிளீச்சிங் பவுடர் போட்டு பின்னர் மூடி விட்டதாக தெரிகிறது.
ஒரு நாள் கழித்து மீண்டும் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய பிரேம்குமார் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்தார். தந்தையை மீட்க சென்ற மகன் பிரவீன்குமார் அவர்களுக்கு எதிர் வீட்டில் வசித்து சாரநாதன், பிரமோத் ஆகியோரும் மயக்கம் அடைந்தனர்.
அம்பத்தூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்கப்பட்ட நால்வரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே பிரேம்குமார் பிரதீப் குமார் மற்றும் பிரமோத் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.






