அம்பத்தூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர்..!
சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆவடியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் சென்னை திரும்பும் வழியில் இருக்கும்
அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு திடீரென சென்றார்.
வழக்குகளின் பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார். பொதுமக்களின் புகார்கள் குறித்தும்,எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.






