கோவை, நீலகிரிக்கு 3 பேரிடர் மீட்புப் படை விரைந்தது..!
ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து, உதகை, வால்பாறைக்கு 3 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன. கோவை, நீலகிரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளும் கோவை, மற்றும் நீலகிரிக்கு விரைந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.





