--- --:--:-- --

ஜூலை 1 முதல் தமிழகத்தில் 3.16% மின்கட்டணம் உயர்வு?

5

மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆண்டிற்கு 6% அளவிற்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறையானையும் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

 

அதேபோல இந்த முறையும் மின்கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மின் கட்டண உயர்த்தப்படாது என தெரிவித்தார்
இந்த நிலையில், தமிழகத்தில் 3.16% மின்கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்த நிலையில், மின்கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

 

மேலும் 100 யூனிட் மின்சாரம் உள்பட அனைத்து மானியங்களும் தொடரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதேபோல வணிக ரீதியான மின் பயன்பாடுகளுக்கான மின் கணக்கிட்டு முறையில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில் அது குறித்தான அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தனர்.

Right Menu Icon