--- --:--:-- --

தமிழகத்தில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட 29 மாவட்டங்கள்!

5

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் நெல்லை உட்பட 29 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்டில் சிவப்பு மண்டல பகுதியில் இடம்பெற்றுள்ளன. 15 பேருக்கு மேல் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அந்த மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படும்.

 

இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 29 மாவட்டங்கள் சிறப்பு மண்டலப் பகுதி ஆகும் .

 

ஆரஞ்சு மலைப்பகுதியில் திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய ஏழு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 28 நாட்களில் கொரொனாவால் ஒருவர்கூட பாதிக்கப்படாத கிருஷ்ணகிரி மாவட்ட பச்சைவண்ண மண்டலத்தில் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon