--- --:--:-- --

இந்தியாவில் ஊடுருவ முயன்ற 26 பேர் கைது!

download (8)

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 26 பேரும் மேற்கு வங்க எல்லையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவ முயன்றதாக இந்த 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த 26 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

 

நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதால் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும், கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், மேற்கு வங்காளத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் வங்களாதேசத்தில் இருந்து ஊடுருவ முயன்ற அவர்களை கைது செய்ததாகவும் அதில் 26 பேர் பிடிபட்டு இருப்பதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் வர முயற்சி செய்த 26 பேரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆரம்பகட்டத்திலேயே ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

 

பின்னர் வந்த தகவலின் அடிப்படையில் அதில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பங்களாதேஷ் பகுதிகளில் கால்நடைகளை கடத்துவது., பொருட்களை கடத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் நடந்து வருவதால் அங்கு கண்காணிப்பு அதிகப்படுத்தபட்டிருந்தது.

 

அத்தகைய சூழ்நிலையில் தான் இதுபோன்ற ஊடுருவல் முயற்சியில் தற்போது தடுக்கப்பட்டு 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது கடத்தல் சம்மந்தப்பட்ட விவகாரமாக, தீவிரவாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனையா என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon