--- --:--:-- --

`25 பந்துகளில் 65 ரன்கள்!’ – கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH

ipl2019

ரஸ்ஸலின் அதிரடியால் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது
ஐபிஎல் 2019 சீசனின் இரண்டாவது ஆட்டம் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அணி வார்னர், விஜய் சங்கர் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வார்னர் 85 ரன்களும், விஜய் சங்கர் 40 ரன்களும் எடுத்தனர். 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி வீரர்கள் கிறிஸ் லின் மற்றும் ராணா ஆகியோர் துவக்கம் தந்தனர். இதில், கிறிஸ் லின் விரைவாக வெளியேறினாலும், ராணா நிலைத்து நின்றார். ஹைதராபாத் பந்துவீச்சை எளிதில் சமாளித்த இவர் 68 ரன்கள் குவித்தார். இவருக்கு பக்க பலமாக ராபின் உத்தப்பா விளையாடினார். இந்தக் கூட்டணி 80 ரன்கள் பாட்னர்ஷிப் சேர்த்த நிலையில் இருவரும் அடுத்தது வெளியேறினர். இருப்பினும் கடைசி கட்டத்தில் கூட்டணி சேர்ந்த இளம்வீரர் சுப்மன் கில் – ரஸ்ஸல் ஜோடி அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி வாகை சூடியது. இந்தக் கூட்டணி 25 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ரஸ்ஸல் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் சுப்மன் கில் இரண்டு சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் ஐபிஎல் சீசனை வெற்றி கணக்குடன் தொடங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon