தமிழகத்தில் இன்று 2,115 பேருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரிகத்த வண்ணம் உள்ளது.
இன்று ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்தள்ளது. இன்று 1,630 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 30,271 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 41 பேர் உயிரிழந்தனர். இதில் 15 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இதுவரை 666 பேர் உயிரிழந்துள்னர். இன்று ஒரே நாளில் 27537 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 25902 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.






