--- --:--:-- --

கீரனூர் அருகே காரில் கடத்தப்பட்ட 1.75 கிலோ தங்கம் பறிமுதல்

8

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 1.75 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ச்சியான கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நடைபெற்றுள்ள இந்த 5-வது சோதனையில் இந்தத் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

முன்னதாக, கடந்த அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 137 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளையும், நவம்பர் 11-ஆம் தேதி 12.87 டன் செம்மரத்தையும், நவம்பர் 12-ஆம் தேதி 17.74 கிலோ தங்கத்தையும், நவம்பர் 18-ஆம் தேதி 71.24 கிலோ ஹெராயின் போதைப்பொருளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon