--- --:--:-- --
2

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலாமாகவும் வலுப்பெறும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

 

 

தற்போது அது நிலைக்கொண்டுள்ள பகுதியைப் பொறுத்து வரும் 19-ஆம் தேதிக்குப் பிறகு புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இருப்பினும், புயல் கரையை கடக்கும் இடம் மற்றும் அது செல்லக்கூடிய பாதையை தற்போது உள்ள வானிலை படிவங்கள் அடிப்படையில் துல்லியமாக கணக்கிடப்பட முடியவில்லை எனவும், இருப்பினும் வரும் வாரங்களில் அது முழுவதுமாக கணக்கிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 

 

மேலும், நவம்பர் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
இதனிடையே, கடந்த வாரத்தில் நாடு தழுவிய அளவில் மழைப்பொழிவில் நீண்ட கால சராசரியை விட 52 சதவீதம் குறைவாகப் பதிவாகி இருப்பதாகவும், கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை ஒட்டுமொத்த காலத்தில் நாடு முழுவதும் பதிவான மழைப்பொழிவு, நீண்டகால சராசரி அளவை விட 32 சதவீதம் குறைவு என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

இதன் விளைவாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழ்நாட்டில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை, நாளை மறுநாள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழ்நாடு மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

மிரட்ட வரும் புயல்..!

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon