--- --:--:-- --

சீன பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு!

3

சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக ஒப்புக்கொண்ட NVIDIA நிறுவன CEO ஜென்சன் ஹுவாங் அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்விடியா நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்குத் தேவையான சிப்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி என அமெரிக்காவால் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகப் புகார் எழுந்தது.

 

ஆலிஸ் ஹுவாங் உடன் உறவில் இருந்ததை ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டதை அடுத்து, நிர்வாகக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், NVIDIA நிறுவன CEO பதவியில் இருந்து ஜென்சன் ஹுவாங் ராஜினாமா செய்துள்ளார்.

 

 

நிரந்தர CEO-ஐ நியமிக்கும் வரை நிறுவனத்தின் செயல் துணைத் தலைவராகவும் தலைமை நிதி அதிகாரியாகவும் உள்ள கொலேட் க்ரெஸ் தற்காலிக சிஇஓ பொறுப்பை ஏற்றுள்ளார். இதனிடையே, தொடர் சரிவை எதிர்கொண்டு வரும் NVIDIA நிறுவன பங்குகள் மேலும் 10 சதவீதத்திற்கு மேல் சரிவைக் கண்டன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon