தவெக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை – எம்.பி. கார்த்தி சிதம்பரம்
சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில், தவெக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை என எம்.பி. கார்த்தி சிதம்பரம் அதிருப்தி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை எனக் குறிப்பிட்டு, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, மாவட்ட வளர்ச்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதே DISHA கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்துகொள்ளாதது ஏமாற்றமளிப்பதாக கார்த்தி சிதம்பரம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





