--- --:--:-- --

3 நாட்கள் ஆகியும் பதில்கள் வரவில்லை – ஆஸ்டின் எம்.எல்.ஏ

5

9 சட்டமன்றத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், சட்டப்பேரவை விதி 45-ன் படி உறுப்பினர்கள் எழுப்பும் வினாக்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். உறுப்பினர்கள் பேரவையில் கேள்வி அளித்தால், 15 நாட்களுக்குள் அது அனுமதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.

 

 

துறைகளிலிருந்து 42 நாட்களுக்குள் அதற்கான பதில்கள் பேரவைக்கு வரவேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் மேலும் 14 நாட்கள் (2 வாரங்கள்) கால அவகாசம் வழங்கப்படலாம். ஆனால், கேள்வி கொடுத்து 93 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் பல கேள்விகளுக்கு துறைகளிடம் இருந்து பதில்கள் வராததால், மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் விவாதத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

 

 

மேலும், விதிமுறைகளின்படி காலதாமதம் செய்யும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon