ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் குடோன் எப்படி கட்ட முடியும்? – வெங்கடரமணன் கேள்வி
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க போதிய குடோன்கள் இல்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், “3 மாதத்தில் எப்படி முடியும்?” என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சியில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களிலேயே புதிய குடோன்களை எப்படி கட்டி முடிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மணிகள் மழையால் பாதிக்காத வகையில் தவெக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் வெங்கடரமணன் உறுதியளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




