நீட் தேர்வுக்கு எதிரான டூ வீலர் பேரணியை முடக்குவது ஏன்? சென்னை ஐகோர்ட் கேள்வி
நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் மற்றும் இ.டபிள்யூ.எஸ். (EWS) இட ஒதுக்கீட்டை எதிர்த்து இரு சக்கர வாகன பரப்புரை பயணத்திற்கு அனுமதி கோரி திராவிட கழகம் மனு தாக்கல் செய்திருந்தது.
அனுமதி கோரி அளித்த மனுக்கள் போக்குவரத்து நெரிசலை காரணம்காட்டி நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் திராவிட கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அரசு போராட்டங்களுக்கு எதிரானது அல்ல, போராட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது எனத் காவல்துறை தரப்பு வாதிட்டது.
இதனைத் தொடர்ந்து, பேச்சுரிமை, கருத்துரிமை போல் போராடுவதும் மக்களின் அடிப்படை உரிமை என்று குறிப்பிட்ட உயர்நீதிமன்றம், போக்குவரத்து காரணங்களால் அனுமதி மறுத்தால் ஹெலிகாப்டரிலா சென்று போராட முடியும்? என்றும் கேள்வி எழுப்பியது. இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




