--- --:--:-- --

மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம்..!

02

மிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மகளிர் உதவித்தொகை வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் டெல்லி தேர்தலிலும் பாஜக தனது தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தது.

 

அதன்படி டெல்லியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

 

அந்தவகையில் டெல்லி லட்சுமி என்ற இந்த திட்டத்தின்படி, ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக குடும்ப வருமானம் கொண்ட, 21 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இந்த நிதி வழங்கப்பட உள்ளது.

 

 

ஆயிரம் ரூபாயை டிஜிட்டல் ரூபாய் வாலெட்டில் செலுத்திவிட்டு, மீதிப் பணத்தை மாதந்தோறும் தொடர் வைப்புத்தொகை (Recurring deposit) அல்லது நிலையான வைப்புத்தொகை (Fixed deposit) ஆக செலுத்துவது அல்லது முழுத் தொகையும் தொடர் வைப்புத்தொகை அல்லது நிலையான வைப்புத்தொகை ஆக செலுத்துவது என இரண்டு வகைகளில் இந்த நிதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்களுக்கு உகந்த முறையை தேர்வு செய்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

 

டிஜிட்டல் ரூபாய் வாலெட்டில் வரவு வைக்கப்படும் தொகையை மதுபானம், சிகரெட், பீடி, புகையிலை, பான் மசாலா, போதைப் பொருட்கள், ஆன்லைன் சூதாட்டம், லாட்டரி உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்த முடியாத வகையில் தொழில்நுட்பத் தடை விதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும், வருமான வரி செலுத்துவோர், ஜி.எஸ்.டி. பதிவு செய்தவர்கள், அரசு ஊழியர்கள், ஏற்கனவே அரசின் நிதியுதவி அல்லது ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்பத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், 17 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயன் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon