--- --:--:-- --

வழக்கு போடுவதால் யாரையும் அழித்துவிட முடியாது – ஆர்.எஸ்.பாரதி

5

செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் ஆர்.எஸ். பாரதி, “செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கத்தோடு போடப்பட்ட வழக்கு. இந்த மாதிரி வழக்கு போடுவதால் யாரையும் அழித்துவிட முடியாது. எமெர்ஜென்சி காலத்தி இருந்து நாங்கள் பார்க்காத வழக்கா? 2001-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது எஃப்.ஐ.ஆர் கூட போட முடியவில்லை. பொய் வழக்குகளை போடுவதில் தான் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

 

மேகதாது விவகாரம், நீட் விவகாரம் என பல பிரச்சனைகள் இருக்கிறது, அதை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. முதலமைச்சர் விஜய், கர்நாடகா செல்ல இருக்கிறார் என்று சொல்கிறார்கள். எப்போது போறார்? எங்கே போறார் என்று எதாவது உறுதியான தகவல் வந்திருக்கிறதா? இது ஒரு தெளிவில்லாத அரசாங்கம், திறமையற்ற அரசாங்கம்” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon