--- --:--:-- --

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

02

கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

 

 

இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் 5ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வட உள் தமிழக மாவட்டங்களில் நாளை பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon