--- --:--:-- --

தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்

5

த்திய அரசுப் பணியில் இருந்து மீண்டும் தமிழ்நாடு பணிக்காகத் திரும்பிய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேஷ் லக்கானி, தமிழ்நாட்டின் புதிய நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

மத்திய பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் நவோதயா வித்யாலயா சமிதி அமைப்பின் ஆணையராகப் பணியாற்றி வந்த அவர், சொந்தக் காரணங்களுக்காக அண்மையில் மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவருக்குப் புதிய பொறுப்பை வழங்கி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon