தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளைத் தடுக்கும் வகையில், கடுமையாக்கப்பட்டுள்ள புதிய வரைவு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய வரைவு மசோதாவில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குக் கூடுதல் சிறைத்தண்டனை, பெருந்தொகை அபராதம் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் (Fast-track courts) மூலம் விசாரணை உள்ளிட்ட கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த மசோதாவை வரவிருக்கும் ஜூலை 27-ம் தேதியே நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




