திருப்பூர் அணைப்பாளையம் பாலம் விரைவில் திறப்பு!” கவுன்சிலர் தீவிர கள ஆய்வு!
திருப்பூர், ஜூலை 23 —
திருப்பூர் மாநகராட்சி முதலாம் மண்டலத்திற்கு உட்பட்ட 25-வது வார்டு அணைப்பாளையம் பகுதியில், கடந்த சுமார் 18 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பாலப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக நிறைவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், அதிகாரிகளுடன் இணைந்து 25வது வார்டு அதிமுக கவுன்சிலர் தங்கராஜ் நேரில் சென்று பணிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தார். பாலப்பணிகள் நடைபெறும் ரங்கநாதபுரம் செல்லும் சாலையில், குவிந்து கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணிகளை துரிதப்படுத்தினார்.

பாலப்பணிகளுக்கு எவ்விதமான தாமதமோ இடையூறோ ஏற்படாத வண்ணம், உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில், களமிறங்கிப் பணியாற்றி வருவதாகக் கவுன்சிலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குச் சாலை திறக்கப்படும் என்பதால், நீண்டகாலப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





