நான் அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டன் : கட்சி மாறுவதாக வெளியான தகவலுக்கு புவனகிரி எம்.எல்.ஏ மறுப்பு..!
தான் வேறு கட்சிக்குச் செல்லப் போவதாகச் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று புவனகிரி அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்மொழிதேவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், தான் இருக்கும் வரை அ.தி.மு.க) புரட்சித்தலைவி அம்மா-வின் உண்மைத் தொண்டனாகவே நீடிப்பேன் என்பதை மிகுந்த உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாகக் கூறி, பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




