ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு – சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
தமிழ்நாடு மின் துறையில் டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் சமீபத்தில் திருடப்பட்டன. இது தொடர்பாக சிந்தாதரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இதையடுத்து, ஒப்பந்த ஊழியர் கோபிநாத்தை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து சுமார் 16 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




