கொம்பூதல் ஊதி மகிழ்விப்பு… செல்வராஜின் பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!
கண்ணுபடப்போகுதுங்க: பிரசாரத்தின்போது செல்வராஜ் எம்.எல்.ஏ.வுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு தந்த பொதுமக்கள்.
பல்லடம்: பல்லடம் தொகுதிக்குட்ட பகுதிகளில், ஆரவார வரவேற்புக்கு மத்தியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார் திமுக வேட்பாளர் செல்வராஜ். அந்த வகையில், புத்தெரிச்சல் பகுதியில் வாக்கு சேகரித்தபோது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு அரங்கேறியது.
அங்குள்ள பாரம்பரிய இசைக்கருவியான ‘கொம்பூதல்’ கருவியை செல்வராஜ் மிகுந்த உற்சாகத்தோடு இசைத்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வியப்பில் ஆழ்ந்தனர். வேட்பாளரின் இந்த எதார்த்தமான அணுகுமுறை, அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்ததோடு, பிரச்சாரக் களத்தை விழாக்காலமாக மாற்றியது.
அலகுமலை முதல் கருடமுத்தூர் வரை…
தொடர்ந்து கழுவேரிபாளையம், கருடமுத்தூர் மற்றும் அலகுமலை ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்தப் பகுதிகளில் திரண்டிருந்த பெண்கள், அவருக்கு ஆரத்தி எடுத்து, பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும் பொறுமையுடன் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், “திருப்பூர் மாநகரம் அடைந்த தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி, பல்லடம் தொகுதிக்கும் கொண்டு வரப்படும்” என உறுதி அளித்தார்.
திரும்பத் திரும்ப ஒரே வாக்குறுதிகளை வழங்காமல், அந்தந்தப் பகுதியின் தேவைகளை அறிந்து அவர் பேசியது வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பல்லடம் தொகுதியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல செல்வராஜ் காட்டும் வேகம், எதிர்தரப்பினரைச் சற்றே யோசிக்க வைத்துள்ளது என்பது மட்டும் நிதர்சனம். செல்வராஜின் இந்த அனல் பறக்கும் பிரச்சாரத்தால், பல்லடம் தேர்தல் களம் தற்போது களைகட்டியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




