--- --:--:-- --

நடிகை சாய் பல்லவி சிங்கிளா? திருமணம் எப்போது?

11

திறமையான தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆனது. இதை தொடர்ந்து D55 மற்றும் விஜய் சேதுபதி – மணி ரத்னம் படம் கைவசம் உள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது பாலிவுட் சென்றுள்ளார்.

 

இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் முதல் இந்தி திரைப்படம் Ek din. இப்படத்தில் அமீர் கான் மகனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இதை தொடர்ந்து ராமாயணா பார்ட் 1 மற்றும் பார்ட் 2 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில், “எப்போது திருமணம்?” என கேள்வி கேட்கப்பட்டது. “இப்போதைக்கு திருமணம் இல்லை, கண்டிப்பாக இல்லை. நான் சிங்கிளாகதான் இருக்கிறேன்” என கூறியுள்ளார். திருமணம் குறித்து சாய் பல்லவி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon