--- --:--:-- --

இன்று தவெகவின் மகளிர் தின விழா..!

1

வெகவின் மகளிர் தின விழாவில் பங்கேற்கும் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெண்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வெளியிட உள்ளார். தவெக சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் இன்று மாலை 3 மணிக்கு மகளிர் தின விழா நடைபெறுகிறது.

 

விழாவில் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக மகளிருக்கான திட்டங்களை தவெக தலைவர் விஜய் அறிவிக்கவுள்ளதாக பொதுச்செயலாளர் ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருப்பதாகவும், அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அனுமதிச் சீட்டு இல்லாத தொண்டர்களும், பொதுமக்களும் நிகழ்ச்சியை தொலைக்காட்சி நேரலையில் கண்டு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தவெக தரப்பில் நாளை அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின விழா கொண்டாடப்படும் என்றும் ஆனந்த் அறிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon