தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, அரசு பணத்தைத் தவறான முறையில் தாரை வார்ப்பதை தேர்தல் ஆணையம் எவ்வாறு அனுமதிக்கிறது? நீதிமன்றங்களும், மத்திய அரசும் இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது வேதனைக்குரியது.
ஆட்சி – அதிகாரம், பண பலம், சாதி பலம், அடியாள் பலம் உள்ளிட்ட எந்த அம்சங்களும் மேலோங்கிட தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. ஜனநாயகப் பூர்வமாக தேர்தலை எதிர்கொள்ளாமல், ஏமாற்று அரசியலில் ஈடுபடும் இந்த திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, தேர்தலையொட்டி இன்னும் திமுகவால் அரங்கேற்றப்பட இருக்கின்ற முறைகேடுகளை தடுத்து, நியாயமான தேர்தலை நடத்திட, உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டுவர வேண்டும்.
அனைத்து அரசு நிர்வாகத்தையும் தேர்தல் ஆணையமே நேரடியாக மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக் கொள்கிறேன்
மேலும் செய்திகள் :
சிதம்பரம், கனிமொழி மேஜிக்! திமுகவில் 28 சீட்+ ஒரு ராஜ்யசபா.. காங்கிரஸ் பணிந்தது எப்படி?
ஆளுங்கட்சியில் காமக் கொடூரர்கள்! விமானத்தில் பாலியல் அட்டகாசம்.. டிமிக்கி தந்த திமுக கவுன்சிலர் கைது...
கழுத்தில் பச்சைத் துண்டு.. அனல் பறந்த அரசியல் பேச்சு.. தஞ்சையில் மாஸ் காட்டிய விஜய்!
தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை..!
யாருக்கு? 2026 சனிப்பெயர்ச்சி மகரம், கும்பம், மீனம்
பண மழை எந்த ராசிகளுக்கு? 2026 சனிப்பெயர்ச்சி துலாம், விருச்சிகம், தனுசு






