பிரம்மாண்ட படத்தில் மீண்டும் 43 வயது நடிகருடன் இணையும் ராஷ்மிகா..!
இந்திய அளவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்பட்டு வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல், புஷ்பா 2, சாவா போன்ற படங்கள் மாபெரும் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தன.
பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி நடிகர் விஜய் தேவரகொண்டாவை கரம்பிடிக்க போவதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஷ்மிகா – அல்லு அர்ஜுன் ஜோடி புஷ்பா படத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டது. இந்த நிலையில், மீண்டும் இவர்கள் இருவரும் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படத்தில் ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியிருப்பதாக லேட்டஸ்ட் Buzz வெளியாகியுள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.
பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அறிவிப்பு வெளியாகிறதா என்று. அல்லு அர்ஜுன் – அட்லீ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். தீபிகா படுகோன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




